முதல் டி20 போட்டி: இந்தியாவுக்கு எதிராக துடுப்பெடுத்தாடுகிறது மேற்கிந்திய தீவுகள் அணி!

Saturday, August 27th, 2016

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 2 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர், பொதுவான இடமான அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் பார்க் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அங்கு இந்த போட்டிக்கு (ஆகஸ்ட் 27, 28) ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று நடக்கும் முதல் டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி அதிரடியாக விளையாடி 13 ஓவர்கள் முடிவில் 1 இலக்கை இழந்த 171 ஓட்டங்களுடன் விளையாடி வருகிறது.

Untitled-2 copy

Related posts: