முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை தடுமாற்றம்!

Sunday, August 21st, 2016

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நிதானமாக விளையாடி வருகிறது.குஷால் பெரேரா 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். டில்ஷான் நிதானமாக ஆடி வந்த நிலையில் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

35 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Related posts: