முதல் இன்னிங்ஸில் இலங்கை 281 ஓட்டங்கள்!
Thursday, August 4th, 2016
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளை இழந்துள்ளது.
இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் 86 ஒட்டங்களயும் அணித்தலைவர் மெத்தியுஸ் 54 ஒட்டங்களையும் பெற்றதுடன், குசல் பெரேரா 49 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆஸி அணி சார்பில் மிச்சல் ஸ்டார்க் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார். தனமு முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள அவுஸ்திரேலிய அணி 54 ஓட்டங்களுக்கு2 விக்கட்டினை இழந்துள்ளது.
தனது முதலாவது போட்டியில் விளையாடும் விஷ்வ பெர்னாண்டோ இன்றைய போட்டியில் முதலாவத ஓவரிலேயே தனது முதலாவத இலக்கை கைப்பற்றியுள்ளார்.
Related posts:
நியூசிலாந்துத் தொடர் இரத்தாகாது?
தற்போதைய சுழல்பந்து வீச்சாளர்களிடத்தில் சோதனை செய்தால் பலர் தோல்வியடைவர்.!
BPL இருபதுக்கு இருபது தொடர் - திசர பெரேரா அதிரடி!
|
|