முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 400 ஓட்டங்கள் குவிப்பு!

Saturday, December 10th, 2016

மும்பையில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்கள் குவித்து சகல விக்கெட்டையும் இழந்தது.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வன்கடே மைதானத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியில் அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் சதம் அடித்தார். அவர் 112 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தலைவர் குக் 46 ஓட்டமும், மொயின் அலி 50 ஒட்டமும் எடுத்தனர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 288 ஒட்டங்கள் எடுத்தது. அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றினார். பென்ஸ்டோக்ஸ் 25 ஓட்டமுமு, ஜோஸ் பட்லர் 18 ஓட்டத்துடன் களத்தில் இருந்தனர்.

2-வது நாள் ஆட்டம் நடந்தது. பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் தொடர்ந்து விளையாடினார்கள். தலைவர் விராட் கோலி வேகப்பந்து வீச்சை பயன்படுத்தாமல் சுழற்பந்து மூலம் தாக்குதல் தொடுத்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

அஸ்வின் வீசிய 97-வது ஓவரின் கடைசி பந்தில் பென் ஸ்டோக்ஸ் ஸ்லிப் பகுதியில் நின்ற கோலியிடம் பிடியானார். இந்திய வீரர்கள் முறையீடு செய்தனர். ஆனால் நடுவர் ஆட்டமிழப்பு கொடுக்க மறுத்ததால் கோலி டி.ஆர்.எஸ். முறையில் முறையீடு செய்தார். இதில் பந்து பேட்டில் பட்டது தெளிவானது. இதையடுத்து பென் ஸ்டோக்சுக்கு ஆட்டமிழப்பு கொடுக்கப்பட்டது. அவர் 31 ஓட்டங்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 297 ஓட்டங்களாக இருந்தது.

இதன்மூலம் அஸ்வின் 5-வது விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் களம் வந்தார். இங்கிலாந்து 98.1 ஓவரில் 300 ஓட்டங்களை கடந்தது. தொடர்ந்து ஆடிய பட்லர் அரை சதம் கடக்க, மறுமுனையில் கிறிஸ் வோக்ஸ் 11 ஓட்டங்கள், ரஷித் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 385 ஓட்டங்கள் என்ற நிலையை எட்டியது.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜேக் பால் 31 ஓட்டங்களிலும், பட்லர் 76 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் சரியாக 400 ஓட்டங்களில் முடிவுக்கு வந்தது. 9-வது விக்கெட்டுக்கு ஜேக் பால், பட்லர் இருவரும் சேர்ந்து 54 ஒட்டங்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா தரப்பில் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

25col6070153649272_5083296_09122016_aff_cmy

Related posts: