முதல் இன்னிங்சிற்காக312 ஓட்டங்களை குவித்தது இலங்கை!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சிற்காக அனைத்து விக்கெட்களையும் இழந்து 312 ஓட்டங்களை குவித்துள்ளது.
காலி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.
அவ்வணி சார்பாக தனஞ்சய டி சில்வா 122 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மத்தியூஸ் 64 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்திருந்தனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா மற்றும் அப்ரார் அஹமட் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் ஆகா சல்மான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சுதந்திரக் கிண்ண ரி-20 போட்டிகள் மார்ச் 06 ஆரம்பம்!
அபார இரட்டை சதம்: சாதனை படைத்த வங்கதேச வீரர்!
10 வருடங்களுக்குப் பிறகு ஐ.சி.சியின் அனுமதியுடன் பாகிஸ்தானில் போட்டி!
|
|