முதல் இனிங்ஸ்: 289 ஓட்டங்களுக்குள் சுருண்டது பங்களாதேஷ்!

Saturday, January 21st, 2017

ரிம் சௌதி மற்றும் போல்ட் அபார பந்துவீச்சுக்கு 289 ஓட்டங்களுக்குள் சுருண்டது பங்களாதேஷ் அணி. நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் அந்த அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆகியவற்றை பறிகொடுத்தது.

இந்நிலையில் நேற்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் பங்களாதேஷ் முதலாம் நாள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 289 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் சௌமியா சர்க்கார் 11 பவுண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்களையும் கடந்த போட்டியில் இரட்டைசதம் கடந்த சகிப் அல்கசன் 59 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

பந்துவீச்சில் அபாரமாக வீசிய சிரேஸ்ட வீரர் சௌதி ஐந்து இலக்குகளையும் போல்ட் நான்கு விக்கெட்டையும் வக்னர் ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

அணித்தலைவர் ரஹீம் காயம் காரணமாக இந்தப்போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தமிம் இக்பால் அணியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ளார்.

புதிய முகங்களும் பங்களாதேஷ் சார்பில் ஆடுகின்றமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற இருக்கின்றது. போட்டி என்ன என்ன சுவார்சியத்தை தரப்போகின்றது என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

25col8041

Related posts: