முதல்முறை உலகக்கிண்ணம் வென்று பெல்ஜியம் சாதனை!
Monday, December 17th, 201814வது ஆண்கள் ஹாக்கி உலகக்கிண்ணம் இம்முறை இந்தியாவில் நடைபெற்றது. மொத்தமுள்ள 16 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாடின.
இதன் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின.
புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. மூன்று முறை சாம்பியனான நெதர்லாந்தை, பெல்ஜியம் அணி தீரமுடன் எதிர்கொண்டது.
2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதே பெல்ஜியம் அணிக்கு மிகப்பெரும் சாதனையாக இருந்து வந்தது.
இந்நிலையில் நடைபெற்ற போட்டியில் ஆட்ட நேர இறுதியில் இரு அணிகளாலும் கோல் எதுவும் சேர்க்க முடியவில்லை.
இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் பெல்ஜியம் அணி 3 – 2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் ஹாக்கி உலகக்கிண்ணத்தை முதல் முறையாக பெல்ஜியம் கைப்பற்றியது.
இது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஹாக்கி உலகக்கிண்ணத்தில் பெல்ஜியம் 5வது இடத்துடன் விடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|