முதல்முறையாக இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுகிறது வங்காளதேசம்!

Thursday, August 4th, 2016

வங்காளதேச கிரிக்கெட் அணி முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது.

ஒரே டெஸ்ட் போட்டியான இது அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ந்திகதி முதல் 12-ந்திகதி வரை ஐதராபாத்தில் நடைபெறுகிறது. “டெஸ்டில் முன்னணி அணிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

ஒவ்வொரு டெஸ்ட் அணிக்கு எதிராகவும் விளையாடும் வாய்ப்பை வழங்கும் பொறுப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உள்ளது. அண்டை நாடான வங்காளதேசம், நமது அணிக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம். 2016-17-ம் ஆண்டு உள்ளூர் சீசனில் இந்த டெஸ்டையும் சேர்ப்பது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்” என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

Related posts: