முதலிடம் பெறும் அணிக்கு 2.2 மில்லியன் டொலர்!

இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள சம்பியன்ஸ் கிண்ண தொடரில் முதலிடத்தை பெற்றுக் கொள்ளும் அணிக்கு 2.2 மில்லியன் டொலர்கள் வழங்கப்படுமென சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அத்துடன், இரண்டாம் இடத்தை பெற்றுக் கொள்ளும் அணிக்கு 1.1 மில்லியன் டொலர்களும் வழங்க தீர்மானித்துள்ளதாக அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகளுக்கு தலா 4 இலட்சத்து 50 ஆயிரம் டொலர்களும் ஒவ்வொரு பிரிவுகளிலும் மூன்றாம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு 90 ஆயிரம் டொலர்களும் கடைசி இடத்தை பிடிக்கும் அணிக்கு 60 ஆயிரம் டொலர்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த தொடரில் வெற்றிபெறும் அணிகளுக்கு மொத்தமாக 4.5 மில்லியன் டொலர்கள் பரிசாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த தொடரில் 5 இலட்சம் டொலர்கள் அதிகமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பித்தக்கது.
Related posts:
|
|