முதலிடத்தை இழந்தார் விராட் கோஹ்லி!

Wednesday, August 15th, 2018

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லி துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தை இழந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 149 ஓட்டங்களும், 2-வது இன்னிங்சில் 51 ஓட்டங்களும் குவித்த இந்திய அணி தலைவர் கோஹ்லி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறினார்.

இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி (23, 17 ஓட்டங்கள்) பேட்டிங்கில் சொதப்பினார். இதனால் 15 தரவரிசை புள்ளிகள் இழந்த அவர் (919 புள்ளிகள்) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதன்மூலம் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (929 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Related posts: