முதலிடத்தைப் பிடிக்கும் ஜேர்மனி!
Friday, September 15th, 2017உலக காற்பந்தாட்ட சம்மேளனம் FIFA நேற்று வெளியிட்ட , தரப்படுத்தல் பட்டியலில் , ஜெர்மனி முதலிடத்தைப் பிடித்துள்ளது . செக் குடியரசுக்கு எதிராகவும் , நோர்வேக்கு எதிராகவும் , இந்த மாதம் விளையாடி வென்ற காரணத்தால் , அதற்கு முன்னணி வகிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது .
லயனல் மெஸ்ஸியின் ஆர்ஜெண்டீனா , நான்காம் இடத்துக்கு இறங்கி உள்ளது. ரொனால்டோவின் போர்த்துக்கல் அணி , மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. பிரித்தானியாவின் சிறந்த அணியாகி உள்ள வேல்ஸ் ,இங்கிலாந்தை 15ம் இடத்துக்கு தள்ளி விட்டு , 13ம் இடத்துக்கு தாவி இருக்கின்றது.
முதல் பத்து இடத்திலுள்ள அணிகளின் பட்டியல் இதோ :
ஜேர்மனி , பிரேசில் , போர்த்துக்கல் , ஆர்ஜெண்டீனா , பெல்ஜியம் , போலந்து , சுவிற்சர்லாந்து , பிரான்ஸ் , சிலி , கொலம்பியா
Related posts:
இறுதிக்கட்ட ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டிகள் இலங்கையில்!
ரசிகர்களிடம் ரணதுங்கா வேண்டுகோள்
சுருண்டது பங்களாதேஷ்: வலுவான நிலையில் இந்தியா!
|
|