முதலிடத்தில் ஸ்டைன்!

Thursday, September 1st, 2016

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் தென்னாபிரிக்க வீரர் ஸ்ரைன் முதல் இடத்தை வசப்படுத்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலை ஐ.சி.சி தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளரான டேல் ஸ்டைன் 878 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவர் தற்போது நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 33 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இவருக்கு மீண்டும் முதல் இடம் கிடைத்துள்ளது.

இதற்கு அடுத்த படியாக இங்கிலாந்தை சேர்ந்த ஆண்டர்சன் 870 புள்ளிகளுடனும், மூன்றாவது இடத்தில் 859 புள்ளிகளுடன் இந்தியா சார்பில் அஸ்வினும், நான்காவது இடத்தில் 836 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராடும், ஐந்தாவது இடத்தில் 831 புள்ளிகளுடன் இலங்கை வீரர் ஹெராத்தும் உள்ளனர்.

இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 773 புள்ளிகளுடன் எட்டாவது இடம் பிடித்து முதல் பத்து இடங்களுக்குள் உள்ளார்.மேலும் இந்திய அணி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இரண்டாவது இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.