முதலாவது போட்டியில் திடமான நிலையில் இலங்கை அணி!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவின்போது 4 விக்கட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் இரண்டாவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்தத நிலையில், 166 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றார்.
மறுமுனையில் அசேல குணரத்ன தனது அரைச் சதத்தை பூர்த்திசெய்து 85 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.
பங்களாதேஷ் அணி சார்பில் தஷ்கின் அஹமட் 48 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை வீழ்த்தினார்.
Related posts:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மோதும் வீரர்கள்!
இறுதி விக்கெட் வரை போராடி வெற்றி பெற்றது சென்றலைட்ஸ்!
வரலாற்று சாதனை படைத்தது ஆப்கானிஸ்தான் அணி!
|
|