முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

Thursday, June 24th, 2021

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் தசுன் சானக்க 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு இருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்கள் நிறைவில் 130 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

000

Related posts: