முதற்தடவையாக விம்பிள்டனைக் கைப்பற்றினார் முகுருசா!

Sunday, July 16th, 2017

ஸ்பெயின் டென்னிஸ் வீராங்கனை கர்பின் முகுருசா முதன்முறையாக விம்பிள்டன் கிண்ணத்தை வென்றுள்ளார்.

லண்டனில்  நடைபெற்ற விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி இவர் கிண்ணத்தை சுவீகரித்துள்ளார்.

இந்த போட்டியில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியானான அமெர்க்காவின் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் ஸ்பெயினின் கர்பின் முகுருசா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

இந்தபோட்டியில் வீனஸ் வில்லியம்சை 7-5 6-0 என்ற செட் அடிப்படையில் வெற்றி கொண்ட கர்பின் முகுருசா முதன்முறையாக விம்பிள்டன் கிண்ணம் வென்றுள்ளார்.

இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துடைய பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் கிண்ணத்தை மாத்திரம் வெற்றிகொண்டிருந்த இவர் டென்னிஸில் உயரிய கிண்ணமாக கருதப்படும் விம்பிள்டன் கிண்ணத்தையும் வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த விம்பிள்டன் தொடரை வீனஸ் வில்லியம்ஸ் கைப்பற்றுவர் என அவரது சகோதரியும் டென்னிஸ் ஜாம்பவான் செரினா வில்லியம்ஸ் சூளுரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: