முதன்முறையாக IPL இல் களமிறங்கும் அம்லா!

Friday, May 6th, 2016
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய ஷோன் மார்ஷ் காயம் காரணமாக விலகியதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக தென்னாபிரிக்க முன்னணி துடுப்பாட்ட வீரரான ஹசிம் அம்லா சேர்க்கப்பட்டுள்ளார்.

33 வயதான அம்லா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எஞ்சிய ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியுடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அளிக்கிறது. ஐ.பி.எல்.-ல் ஆடுவதை ஆவலுடன் எதிர்பார்த்திருகின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுமன்தினம் அம்லா பஞ்சாப் அணியுடன் இணைந்த அம்லா அடுத்த போட்டியில் ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாகவுள்ளார்..

முன்னதாக ஐ.பி.எல். ஏலத்தின் போது அம்லாவை எந்த அணியும் வாங்காமல் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: