முக்கோண தொடர்களில் விளையாட இலங்கை அணி இம்மாதம் சிம்பாப்வே பயணம்!

Saturday, October 1st, 2016

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரும் அதனை தொடர்ந்து இலங்கை, சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரும் சிம்பாப்வே மண்ணில் நடைபெற உள்ளதாக சிம்பாப்வே கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகளும் ஹராரேயில் நடைபெற உள்ளதோடு 1ஆவது டெஸ்ட் போட்டி ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.

இந்த தொடரை தொடர்ந்து இலங்கை, சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நவம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இதன் முதலாவது போட்டியை நடத்தும் சிம்பாப்வே அணி இலங்கை அணியை ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் சந்திக்கிறது.

மொத்தமாக 7 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் ரவுண்ட் – ரொபின் போட்டிகளில் மூன்று அணிகளும் இரண்டு முறை அடுத்த அணியுடன் விளையாட வேண்டும். அதன் பின் இறுதிப் போட்டி 27ஆம் திகதி நடைபெற ஏற்பாடகியுள்ளது.

இந்த தொடரின் முதல் 2 போட்டிகள் ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் கடைசி 4 போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி புலவாயோ குயீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும் என சிம்பாப்வே கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் கடைசியாக 2004ஆம் ஆண்டு 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தோடு இந்த 2 அணிகளும் மொத்தமாக 15 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை ஒன்று சந்தித்துள்ளன. இதில் 10 போட்டிகளை இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதோடு ஏனைய போட்டிகள் சமநிலையில் நிறைவு பெற்றுள்ளன.

14412sri-lanka-cricket-logo1

Related posts: