முக்கோணத் தொடரை வெல்ல காரணம் சொல்லும் தினேஷ் சந்திமால்!

Monday, January 29th, 2018

பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹத்துருசிங்க அணிக்கு வழங்கிய நம்பிக்கையினாலேயே முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடிந்ததாக இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகள் விளையாடிய முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்  நிறைவுக்கு வந்தது.

தொடரின் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணியை தோற்கடித்த இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை சூடியது. இது இவ்வருடத்தில் இலங்கை அணி கைப்பற்றிய முதல் சாம்பியன் பட்டமாகும்.

Related posts: