முகநூலினால் மத்யூஸ் மன உளைச்சலில்.. – திலங்கவிடம் தலைமையிலிருந்து விலகவும் கோரிக்கை!

அஞ்சலோ மத்யூஸ் இனது கிரிக்கெட் வாழ்க்கையினை இருட்டாக்க சமூக வலையத்தளங்களில் சிலர் முயல்வதாக இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க அணியுடன் நேற்று(22) இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் மேற்குறித்த கும்பலுக்கு மேத்யூஸ் துடுப்பின் மூலம் பதிலளித்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலையதளங்களில் ஊடாக ஏஞ்சலோ மேத்யூஸ் அணித் தலைமையிலிருந்து விலக வேண்டும் என கருத்துக்களும் போஸ்டர்களும் பரவலாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.குறித்த காரணங்களினால் ஏஞ்சலோ மேத்யூஸ் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக திலங்க சுமதிபால தெரிவிக்கின்றார்.
இவ்வாறு தொடர்ந்தும் தலைமை குறித்து பரவலாக பேசுகின்றமையினால் தான் அணியின் தலைமையிலிருந்து விலகவா.. எனவும் தம்மிடம் கோரியதாக மேலும் திலங்க சுமதிபால கூறுகிறார்.
Related posts:
|
|