மீண்டும்  T – 20க்கு திரும்பும் டெய்லர்  !

Wednesday, November 1st, 2017

 

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ராஸ் டெய்லர் ஒன்றரை ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கிண்ணப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.

அதன் எதிரொலியாக டெய்லர் டி20 தொடர்களில் புறக்கணிக்கப்பட்டு வந்தார். இந்த ஆண்டு நடந்த வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களிலும் டெய்லருக்கு இடம் கிடைக்கவில்லை.இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக டெய்லர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறுகையில், ராஸ் டெய்லர் தற்போது நல்ல பார்மில் உள்ளார், நடுவரிசை வீரராக அவர் களமிறங்குவார்.டெய்லரின் அனுபவம் அணிக்கு நல்ல பலனை அளிக்கும், மேலும் இந்தியாவில் அந்த அணிக்கு எதிராக விளையாடுவது மிகவும் சவாலான விடயம் ஆகும் என தெரிவித்துள்ளார்.இவ்விரு அணிக்களுக்கும் இடையேயான டி20 தொடர் வரும் நவம்பர் 1ம் திகதி டெல்லியில் தொடங்க உள்ளது.

Related posts: