மீண்டும் வெற்றியை ருசித்தது ஜமைக்கா!
Friday, July 22nd, 2016கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் நேற்றுமன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா டாலவாஸ் அணி 36 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்றது.
பார்படாஸ் டிரிடன்ஸ் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா டாலவாஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர் வால்டன் 97 ஓட்டங்களும், சங்கக்காரா 50 ஓட்டங்களும் குவித்தனர். கடந்தப் போட்டியில் டக்-அவுட் ஆன அணித்தலைவர் கெய்ல், இந்தப் போட்டியில் 8 ஓட்டங்களே எடுத்தார்.
கடைசி நேரத்தில் ரொவ்மன் பவல் 14 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்து அணியின் ஓட்டங்களை உயர்த்தினார். இதன் பின்னர் 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பார்படாஸ் டிரிடன்ஸ் அணி ஸ்டெய்னின் வேகத்தில் தடுமாற ஆரம்பித்தது.
இதனால் அந்த அணி 17.4 ஓவரில் 159 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நிக்கோலஸ் போரான் (51) மட்டும் அரைசதம் எடுத்தார்.
இதனால் ஜமைக்கா டாலவாஸ் அணி 36 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. வேகத்தில் அசத்திய டேல் ஸ்டெய்ன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 97 ஓட்டங்கள் குவித்த ஜமைக்கா டாலவாஸ் அணியின் தொடக்க வீரர் வால்டன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.ஜமைக்கா டாலவாஸ் அணி 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Related posts:
|
|