மீண்டும் வெற்றியாளராக வலம் வருவார் டைகர் வுட்ஸ் – போல் மெக்கின்லே!

புகழ்பெற்ற கொல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ், மீண்டும் வெற்றியாளராக வலம் வருவார் என்று, முன்னாள் ரைடர் கிண்ண தலைவர் போல் மெக்கின்லே தெரிவித்துள்ளார்.
நாளை ஆரம்பமாகவுள்ள அமெரிக்க பகிரங்க கொல்ஃப் தொடரில் டைகர் வுட்ஸ் விளையாடவுள்ளார்.
14 தடவைகள் மாஸ்ட்டர் பட்டங்களை வென்ற வுட்ஸ், தமது 15வது மாஸ்ட்டர் பட்டத்தை வெல்வதற்கு 11 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது.
உடல் உபாதைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் பெரும் பின்னடவை சந்தித்துள்ளார்.
எனினும் அமெரிக்க பகிரங்க தொடரில் அவர் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக போல் மெக்கின்லே தெரிவித்துள்ளார்.
Related posts:
வங்கத்திற்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: நடால் தோல்வி!
உலகக்கிண்ண கிரிக்கெற்: முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து!
|
|