மீண்டும் லசித்மலிங்க?

இலங்கையின் ரி20 அணியில் மீண்டும் லசித்மலிங்கை இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகளில் தெரிவுக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நாங்கள் லசித்துடன் விரைவில் பேசுவோம்,அவர் எங்களின் எதிர்கால ரி20 போட்டிகளிற்கான திட்டத்தில் உள்ளார், ஒக்டோபரில் இடம்பெறவுள்ள ரி20 உலக கிண்ணப்போட்டிகளிலும் அவரை விளையாடச்செய்வதற்கான திட்டம் உள்ளது என தெரிவுக்குழுவின் தலைவர் மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைசிறந்த பந்து வீச்சாளர் அவர் என்பதை நாங்கள் மறக்க கூடாது – அவரின் தற்போதைய நிலையிலும் கூட என தெரிவித்துள்ள பிரமோதய விக்கிரமசிங்க அவரது சாதனைகள் அதற்கு சான்றாக உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வருடமும் அடுத்த வருடமும் இரண்டு உலக கிண்ணப்போட்டிகள் உள்ளன,அடுத்த சில நாட்களில் அவரை சந்திக்கும்போது எங்கள் திட்டத்தை தெரிவிக்கப்போகின்றோம் எனவும் பிரமோதய தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லசித்மலிங்க நான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ளேன், ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவில்லை,என தெரிவித்துள்ளார்
என்னை போன்ற சிரேஸ்ட வீரர் ஒருவரின் திறமையை அணியினர் எவ்வாறு பயன்படுத்தப்போகி;ன்றனர் என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட ஒய்விற்கு என்னால்மீண்டும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை நான் பல தடவை நிருபித்துள்ளேன் எனவும் லசித்மலிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|