மீண்டும் முன்னேறிய இந்தியா!

Friday, September 22nd, 2017

இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 252 ஓட்டங்களை பெற்றது

துடுப்பாட்டத்தில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி 92 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 43.1 ஓவர்கள் நிறைவில் 202 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில், சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் தலா மும்மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றினர். குல்தீப் யாதவ் அடுத்தடுத்து மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றி ஹெட்ரிக் சாதனையை ஏற்படுத்தினார். இதன்படி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2க்கு0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த தொடரின் அடுத்த போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.இதேவேளை, நேற்றைய வெற்றியுடன்  இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் மீண்டும் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

Related posts: