மீண்டும் முதல் 10 இடங்களில் ஜோகோவிச்!

Tuesday, July 17th, 2018

விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றதின் எதிரொலியாக நோவக் ஜோகோவிச் ஏ.டி.பி தரவரிசையில் மீண்டும் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.

உலகின் முதல் நிலை வீரராக இருந்த ஜோகோவிச் காயம் காரணமாக நீண்ட காலம் விளையாடமல் இருந்து வந்தார். இதனால் தரவரிசைப் பட்டியலில் 21-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் லண்டனில் நடந்த விம்பிள்டன் போட்டியில் ஜோகோவிச் 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். அதன் எதிரொலியாக தற்போது தரவரிசையில் 10 -ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

கடைசியாக கடந்த 2017 அக்டோபர் மாதம் ஜோகோவிச் முதல் 10 இடங்களில் இருந்தார்.

ஆடவர் ஏடிபி தரவரிசை விவரம்: 1. ரபேல் நடால், 2. ரோஜர் பெடரர், 3. அலெக்சாண்டர் வெரேவ், 4. டெல் பொட்ரோ, 5. கெவின் ஆண்டர்சன், 6. கிரகோர் டிமிட்ரோவ், 7. மரின் சிலிச், 8. ஜான் ஐஷ்நர், 9. டொமினிக் தீம், 10. ஜோகோவிச்.

மகளிர் ஒற்றையர் பிரிவு ஏடிபி தரவரிசையில் சிமோனா ஹலேப் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். விம்பிள்டனில் இரண்டாம் இடம் பெற்ற செரீனா வில்லியம்ஸ் 153 இடங்கள் முன்னேறி தற்போது 28-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

Related posts: