மீண்டும் மிரட்டிய மலிங்கா!

Monday, July 2nd, 2018

கனடா டி20 லீக் போட்டியில் லசித் மலிங்கா அபாரமாக பந்துவீசி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். குளோபல் டி20 கிரிக்கெட் தொடர் கனடாவில் நடந்து வருகிறது.

மொன்றியல் டைகர்ஸ் அணியும் வின்னிபெக் ஹவ்க்ஸ் அணியும் மோதிய நிலையில் வின்னிபெக் அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதே சமயத்தில் மொன்றியல் டைகர்ஸ் அணித்தலைவர் லசித் மலிங்காவின் பந்துவீச்சு போட்டியில் மிக சிறப்பாக இருந்தது.

4 ஓவர்கள் பந்துவீசிய மலிங்கா 19 ஓட்டங்களை விட்டு கொடுத்து டேவிட் வார்னர் மற்றும் டேரன் பிராவோ விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இருவரையும் போல்ட் ஆக்கி அவுட்டாக்கினார் மலிங்கா.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர் இப்போட்டியின் மூலம் மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்த நிலையில் வெறும் 1 ஓட்டம் எடுத்து அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: