மீண்டும் மத்தியூஸ், சுரங்க லக்மால் களத்தில்!

Friday, May 18th, 2018

காயங்களால் நீண்டகாலமாக அவதியுற்றுவந்த இலங்கை அணியின் அஞ்சலோ மத்திவ்ஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடருக்கு உடற் தகுதி பெற்றுள்ளனர் என இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இலங்கை அணி இந்தமாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி ஜுன் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதுடன், இறுதிப் போட்டி ஜுன் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவின் தலைவராக கிரேம் லெப்ரோய் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், ஏனைய உறுப்பினர்களின் நியமனங்கள் எதிர்காலத்தில் இடம்பெறும் என்றும் இலங்கை கிரிக்கட் தெரிவித்துள்ளது.

Related posts: