மீண்டும் பாகிஸ்தான் அணியில்  உமர் குல்!

Friday, August 12th, 2016

வேகப்பந்துவீச்சாளர் உமர் குல்லை ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமக்கு பாகிஸ்தான் மீள அழைத்துள்ளது.

32 வயதான குல், இறுதியாக கடந்தாண்டு ஏப்ரல் மாதமே, பாகிஸ்தானுக்காக ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடியிருந்தார். குல் தவிர, ஹஸன் அலி எனும் வேகப்பந்துவீச்சாளர் முதன்முறையாக பாகிஸ்தான் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

கடந்தாண்டு நவம்பருக்குப் பின்னர், முதற்தடவையாக புறச் சுழற்பந்துவீச்சாளர் யசீர் ஷா இடம்பெற்றுள்ளார். ஊக்கமருந்துத் தடை காரணமாக, இவ்வருட ஆரம்பத்தில், நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி தெரிவு செய்யப்படும்போது யசீர் ஷா கருத்திற் கொள்ளப்படவில்லை. அக்குழாமிலிருந்த 16 பேரில் ஏழு பேர் அறிவிக்கப்பட்ட குழாமில் இடம்பெறவில்லை.

மொஹம்மட் இர்பான், அஹ்மெட் ஷெஷாட், அன்வர் அலி, அசாட் ஷஃபிக், ரஹாட் அலி, சொகைப் மஸ்கூட், ஸஃபர் கோஹர் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், குல் மற்றும் யசீர் ஷாவுக்கு மேலதிகமாக சமி அஸ்லாம், ஷர்ஜீல் கான், மொஹம்மட் நவாஸ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

பாகிஸ்தானின் அணி – அஸார் அலி (தலைவர்), ஷர்ஜீல் கான், சமி அஸ்லாம், மொஹம்மட் ஹஃபீஸ், பாபர் அஸாம், ஷோய்ப் மலிக், சர்ஃபிராஸ் அஹ்மட், மொஹம்மட் ரிஸ்வான், மொஹம்மட் ஆமிர், வஹாப் ரியாஸ், உமர் குல், ஹஸன் அலி, இமாட் வஸீம், யசீர் ஷா, மொஹம்மட் நவாஸ்

Related posts: