மீண்டும் பவுன்சர் பந்து தாக்கியது: மருத்துவமனையில் பிரபல வீரர்!  

Friday, November 18th, 2016

அவுஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் படுகாயமடைந்த வீரர் ஆடம் வோக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான ஷெபீல்டு ஷீல்டு தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று பெர்த்தில் நடந்த போட்டியில் வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா-டாஸ்மேனியா அணிகள் மோதின.

இந்த போட்டியின் போது ஆடம் வோகஸ், கேமரான் ஸ்டீவன்சன் வீசிய பவுன்சர் பந்தை அடிக்க முடியாமல் குனிந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக பந்து தாக்கியதில் நிலைகுலைந்த வோகஸ் கீழே சரிந்தார்.உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பவுன்சர் பந்து தாக்கியதில் பிலிப் ஹியூக்ஸ் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

201611171325182371_Knocked-out-by-bouncer-Aussie-batsman-Adam-Voges-rushed-to_SECVPF

Related posts: