மீண்டும் பட்டம் வென்ற ஜோகோவிச்!

Tuesday, June 15th, 2021

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் பாரீஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 5 ஆம் நிலை வீரரான கிரீஸ் நாட்டைச் சிட்ஸிபாஸை எதிர்கொண்டார்.

சுமார் 4 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த ஆட்டத்தில் 6-7, 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சிட்ஸிபாஸை வீழ்த்தி வாகை சூடினார் ஜோகோவிச். இது ஜோகோவிச் வெல்லும் 19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

ரோஜர் பெடரர், ரஃபேல் நடால் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று முதலிடத்தில் உள்ளனர்.

Related posts: