மீண்டும் நியூசிலாந்து – இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று!

Wednesday, July 10th, 2019

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான முதலாவது அரையிறுதிப் போட்டி, இன்று தொடரவுள்ளது.

12வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மென்செஸ்டர் ஓல்டு-ட்ரபோர்ட் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பலத்த மழையால் போட்டி பாதிக்கப்பட்டது.

இம்முறை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இதுபோன்ற முக்கிய போட்டிகளின் போது பலத்த மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க மேலதிக நாள் ஒன்றை அதாவது ‘ரிசவ் டே’ என்ற முறையை ஐசிசி அறிமுகப்படுத்தியது.

அதன்படி, இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம், நியூசிலாந்து அணி, 46.1 ஓவர்களில் 211 என்ற இடத்தில் இருந்தே ஆட்டத்தை ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: