மீண்டும் தேசிய அணியில் மெஸ்ஸி!

Saturday, August 13th, 2016

கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி மீண்டும் அர்ஜெண்டினா தேசிய அணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கா கோபா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி தோல்வி அடைந்ததையடுத்து சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி அறிவித்தார். இந்நிலையில், ஓய்வு அறிவிப்பை மீளப்பெற்றுக்கொண்ட மெஸ்ஸி மீண்டும் அர்ஜெண்டினா தேசிய அணிக்கு திரும்புவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உலகக் கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அவர் அணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள மெஸ்ஸி, “அர்ஜெண்டினா கால்பந்து அணியில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. மேலும் பிரச்சனைகளை உருவாக்க நான் விரும்பவில்லை. அர்ஜெண்டினா அணிக்கு பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை. முடிந்த அளவில் தான் உதவுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: