மீண்டும் தில்ஷான் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி!

இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடரின் முதலாவது சீசனில் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் (இந்தியா), பிரையன் லாரா, சந்தர்பால் (மேற்கிந்திய தீவுகள்), பிரெட்லீ (அவுஸ்திரேலியா), ஜான்டி ரோட்ஸ் (தென்ஆப்பிரிக்கா), முரளிதரன், தில்ஷான் (இலங்கை) உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
மொத்தம் 110 முன்னாள் வீரர்கள் இதில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய், சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும். ‘சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது
Related posts:
|
|