மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் மலிங்கா!

Friday, July 15th, 2016

முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் இலங்கை டி20 அணியின் முன்னாள் தலைவர் மலிங்கா பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் ஆடவுள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா காலில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை மூலம் ஏற்படும் தொடர் வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

இதனாலே டி20 உலகக்கிண்ண தொடரின் போது தலைவர் பதவியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல், டி20 உலகக்கிண்ண தொடரில் இருந்தும் விலகினார்.

அவர் தொடர்ந்து போட்டிகளில் இருந்து விலகி ஓய்வு பெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள 2வது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்.

இவருடன் அல்பி மோர்கல், நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிராண்டன் மெக்கல்லம், இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைவரான இயன் மோர்கன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

221 டி20 போட்டிகளில் ஆடியுள்ள மலிங்கா 299 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதே போல் அல்பி மோர்கலும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் 287 போட்டிகளில் 3,767 ஓட்டங்கள், 230 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

 

 

 

 

 

 

Related posts: