மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பவுள்ள பிரபல வீரர்கள்!

Wednesday, November 1st, 2017

இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக தென்னாபிரிக்க கிரிக்கட் அணி விளையாடவுள்ள டெஸ்ட் போட்டிகளில், ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோரை இணைக்க முயற்சிக்கப்படுகிறது.

புதிதாக பதவி ஏற்றுள்ள தென்னாப்பிரிக்காவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஓடிஸ் கிப்சன் இதனைத் தெரிவித்துள்ளார். ஏபி டி வில்லியர்ஸ் கடந்த ஜனவரிக்குப் பின்னர் காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கவில்லை.

அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றிருக்கவில்லை.இந்தநிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் டெஸ்ட் அணியில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று புதிய பயிற்றுவிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

அவர்கள் இருவரும் சிம்பாப்பே, இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பங்களாதேஸுடனான தொடரைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க அணி தற்போது வலுவாகவுள்ள நிலையில், அவர்களுக்கு பதிலாக யார்யார் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.

Related posts: