மீண்டும் சந்திப்போம்: நெய்மருக்கு வாழ்த்து தெரிவித்த மெஸ்சி

Sunday, August 6th, 2017

பிரேஸில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் முன்னணி கழக அணியாக திகழும் ஸ்பெயினின் பார்சிலோனா அணியில் இருந்து விடைபெறவுள்ள நிலையில், அவருக்கு அணியில் இடம்பெற்றுள்ள முன்னணி வீரரான லயனல் மெஸ்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மெஸ்சி கணொளி மூலம் வெளியிட்டுள்ள பிரியாவிடை செய்தியில் ”நண்பா நெய்மர், உன்னுடன் விளையாடிய வருடங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதிக அதிர்ஷ்டம் பெற்று உன்னுடைய வாழ்க்கை அடுத்த நிலைக்கு உயர வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடிவரும் நெய்மர், இனிவரும் காலங்களில் பிரான்ஸ் நாட்டின் முன்னணி கழக அணியான பரிஸ் செயன்ட் ஜேர்மைன் அணிக்காக விளையாடவுள்ளார்.

கழக அணிகளில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த பார்சிலோனா அணிக்கு நெய்மரின் இழப்பு பேரிழப்பாக கருதப்படுகின்றது

Related posts: