மீண்டும் சங்கக்காரா- ஜெயவர்த்தன!

Sunday, November 20th, 2016

கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்ஸ் டி20 தொடர் அடுத்த ஆண்டு செப்டெம்பர்- அக்டோபர் மாதம் அமெரிக்காவில் நடக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேவ் வார்னே தெரிவித்துள்ளார்.

ஷேன் வார்னே வாரியஸ்- சச்சின் டெண்டுல்கர் பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதிய ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹொஸ்டன் ஆகிய நகரங்களில் நடந்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு செப்டெம்பர்- அக்டோபர் மாதம் நடக்கவுள்ள கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்ஸ் டி20 போட்டியில் விளையாட பல வீரர்கள் ஒப்பந்தம் செய்துள்ளதாக வார்னே பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.இதில் மெக்குல்லம், பீட்டர்சன், அப்ரிடி, மிட்செல் ஜான்சன், கிளார்க் ஆகியோர் 2வது சீசனில் இணைந்துள்ளனர்.

தவிர, சங்கக்காரா, ஜெயவர்த்தனே, மெக்ராத், காலிஸ், பொண்டிங், அக்தர், லாரா உள்ளிட்ட பலர் இதில் விளையாட உள்ளனர்.

497031245GC00060_Sri_Lanka_

Related posts: