மீண்டும் கிரிக்கெற்றில் ஒரு சோகம்: மைதானத்திலேயே உயிரை விட்ட கிரிக்கெட் வீரர்!

கேரளாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே இளம் வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கேரளாவில் உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது, இப்போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிரிகெட் அணியினர் பங்கேற்றனர்.
போட்டி நடந்து கொண்டிருந்த போது காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பத்மநாப் என்ற இளம்வீரர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.இதைக் கண்ட மற்ற வீரர்களும், நடுவர்களும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பத்மநாப் மயங்கி விழ அதிகமான வெயிலே காரணம் என சக வீரர்களும், போட்டி ஒருங்கிணைப்பாளர்களும் எண்ணினர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்களோ அவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர்.
இதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர், பத்மநாப் மயங்கி விழும் காட்சி கிரிக்கெட் போட்டியை வீடியோ எடுக்கும் பொழுது பதிவாகி உள்ளது. பத்மநாபின் பெற்றோர் கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர்கள் மகன், அதை விளையாடும் போதே உயிரிழந்திருப்பதனால் மிகுந்த துயரடைந்திருக்கிறார்கள்.
இது போல் நடப்பது இது முதல் முறை அல்ல, கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டியில், சக வீரருடன் மைதானத்தில் மோதியதில் பெங்காலி வீரர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|