மீண்டும் களமிறங்கும் வோர்னர்!

பந்தை சேதமாக்கிய சர்ச்சையில் சிக்கிய வோர்னர், மேற்கிந்திய மண்ணில் நடக்கும் கரீபிய பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கிறார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் ஏற்பட்ட இந்த சர்ச்சை காரணமாக வார்னர் ஒரு ஆண்டு தடையில் உள்ளார். இருப்பினும் வரும் 25ம் தேதி அரம்பமாகும் கனடா ‘டுவென்டி௲20’ லீக் தொடரில் பங்கேற்க உள்ளார்.
இதனிடையே பிரிஸ்பேனில் நடந்த பயிற்சி ‘டுவென்டி 20’ போட்டியில் களமிறங்கிய இவர் 130 ரன்கள் விளாசினார். தற்போது கரீபிய பிரிமியர் லீக் தொடரில் செயின்ட் லுாசியா அணிக்காக களமிறங்க அனுமதி கிடைத்துள்ளது. இந்த அணியின் ஷார்ட் காயமடைந்ததால், வார்னர் சேர்க்கப்பட்டார்.
Related posts:
ஜெயவர்த்தனேவுடன் கைகோர்த்த மலிங்கா!
துடுப்பாட்ட ஆலோசகராகிறாரா சச்சின்?
அவுஸ்திரேலிய T-20 தொடர: - லசித் உட்பட 03 முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு!
|
|