மீண்டும் களமிறங்குகிறார் லசித் மலிங்கா – ரசிகர்கள் உற்சாகம்!

கனடா டி20 லீக் கிரிக்கெட் தொடருக்கான அணி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லசித் மலிங்கா உட்பட 4 இலங்கை வீரர்கள் இதில் விளையாடவுள்ளனர்.
தொடரானது ஜூன் 28-ஆம் திகதி தொடங்கி ஜூலை 15-ஆம் திகதி முடிவடைகிறது.
இதில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளது. டொரண்டோ நேஷனல்ஸ் வாங்கவுர் நைட்ஸ் வின்னிபெக் ஹவுக்ஸ் எட்போண்டன் ராயல்ஸ் மொண்றியல் டைகர்ஸ் என அணிகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஸ்டீவ் ஸ்மித் பொல்லார்ட் டேரன் பிராவோ அப்ரிடி போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இலங்கை அணி சார்பாக நான்கு வீரர்கள் தொடரில் பங்கேற்கிறார்கள். லசித் மலிங்கா தஷுன் ஷனகா திசாரா பெரேரா இசுரு உடனா ஆகிய நால்வரும் மொண்றியல் டைகர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்கள்.
Related posts:
ஒலிம்பிக்கில் விளையாட நொய்மருக்கு அனுமதி
முடியும் என நம்பினோம் சாதித்து இருக்கின்றோம் - ரோஹித் !
இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!
|
|