மீண்டும் கத்தில் யுவராஜ் சிங்!

Saturday, June 22nd, 2019

கனடாவில் நடைபெறவுள்ள க்ளோபல் 20 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங் விளையாடவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் அவர் களம் காணவுள்ளார்.

அதன்படி கனடாவில் நடைபெறவுள்ள க்ளோபல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் யுவராஜ் சிங் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், டோரண்டோ நேசனல்ஸ் அணிக்காக இத்தொடரில் அவர் விளையாட உள்ளார்.

வருகிற ஜூலை 25ஆம் திகதி தொடங்கும் இத்தொடரானது, ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

யுவராஜ் மீண்டும் விளையாடவுள்ளார் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts: