மீண்டும் ஒரு வெள்ளையடிப்பு செய்த இந்தியா!

Monday, December 25th, 2017

இந்தியாவுக்கான கிரிக்கெட்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த தொடரின் இன்றைய இறுதி போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரை 3-0 என்று வெள்ளையடிப்பு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பு முடிவை மேற்கொண்டார். முதலில் ஆடிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே விரைவாக 3 விக்கெட்களை இழந்தாலும், அதன்பின்னர் அசேல குணரத்ன மற்றும் சானக்க ஆகியோர் ஓரளவு துடுப்பாட்ட பங்களிப்பை வழங்க, இலங்கை அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 135 ஓட்டங்கள் குவித்தது.

மிகவும் இலகுவான இலக்கான 136என்றை இலக்கை நோக்கி பதிலுக்கு ஆடிய இந்திய அணி, நான்கு பந்துகள் மீதமிருக்க ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி சர்பாக மணிஸ் பாண்டி 32 ஓட்டங்களையும், சேயாஸ் ஐயர் 30 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றுக்கொடுத்தார்கள். பந்துவீச்சில் தசுன் சானக்க மற்றும் துஸ்மந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கட்ட்டுக்களைக் கைப்பற்றினார்கள்.

இலங்கை அணியின் இந்திய சுற்றுலா 6-1 எனும் அடிப்படையில் நிறைவுக்கு வந்துள்ளது. டெஸ்ட் தொடரை 1-0 என்றும்,ஒருநாள் தொடரை 2-1 என்றும் கைப்பற்றிய இந்திய அணி T20 தொடரை 3-0 என்றும் கைப்பற்றியுள்ளது.

இலங்கைக்கு இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 9-0 என மூன்று வகையான போட்டிகளிலும் வெள்ளையடிப்பு செய்த இந்தியாவை, சொந்த மண்ணில் சமாளித்து, அவமானகரமான தோல்வியைத்தவிர்த்துள்ளது.

இந்தியா வரும் ஜனவரி, தென்னாபிரிக்காவுக்காவுக்கான தொடரையும், இலங்கை பங்களாதேஸிற்கான தொடரையும் எதிர்கொள்ளவுள்ளன.

Related posts: