மீண்டும்  இலங்கை தோல்வி!

Friday, October 27th, 2017

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி ஐக்கிய அரபு எமீரகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தானும் கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இன்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன் படி இலங்கை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய தில்சன் முனவீரா ஓட்டம் எதுவும் எடுக்காமல் இமாத் வாசிம் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து குணதிலகா(18), சமரவிக்ரமா(23),பிரியான்ஜன்(12) பதிரினா(4), சன்கா(0) என வெளியேற, கடைசி கட்ட வீரராக களமிறங்கிய பிரசன்னா(23) அதிரடி காட்ட இலங்கை அணி இறுதியாக 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்கள் எடுத்தது.பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஹசன் அலி 3 விக்கெட்டுகள் விழ்த்தி அசத்தினார்.103 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாகர் ஜாமன் 6 ஓட்டங்களிலும், அகம்த் சிசாத்(22), பாபர் அஜாம் (1) என வெளியேறினர்.அதன் பின் ஜோடி சேர்ந்த சோயிப் மாலிக் மற்றும் மொகமத் ஹபீஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்த வெளிப்படுத்த பாகிஸ்தான் அணி 17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் 42 ஓட்டங்களும், மொகமத் ஹபீஸ் 25 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.மேலும் இப்போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் 7 பேர் ஒற்றை இலக்க ஓட்டத்தை தாண்டவில்லை

Related posts: