மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார் கவுதம் கம்பீர்!

Wednesday, September 28th, 2016

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் 2–வது இன்னிங்சில் பீல்டிங் செய்யவில்லை. காயம் காரணமாக எஞ்சிய இரு போட்டிகளில் இருந்தும் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.

 அவருக்கு பதிலாக மூத்த வீரர் கவுதம் கம்பீர் அழைக்கப்பட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 34 வயதான சமீபத்தில் நடந்த துலீப் கோப்பை போட்டியில் இந்திய புளூ அணிக்கு கேப்டன் பொறுப்பு வகித்த கம்பீர் இந்த போட்டி தொடரில் தொடர்ச்சியாக 5 அரை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் கவுதம் கம்பீர் இடம் பெற்றுள்ளார். கடைசியாக 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது இந்திய அணியில் கவுதம் கம்பீர் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

அதேபோல், சிக்குன் குனியா நோயால் பாதிக்கப்பட்ட இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் என்ற புதுமுக வீரர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜெயந்த் யாதவ் சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.

gambhir

Related posts: