மீண்டும் இந்திய அணியில்மொஹமட் ஷமி!

Tuesday, September 12th, 2017

இந்திய கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான உமேஸ் யாதவ் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான தொடர் கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை நடைப்பெறவுள்ளது

இந்த போட்டி தொடரின் முதல் 3 போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 16 இந்திய வீரர்களிலேயே அவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் இதேவேளை, இந்திய அணியில் சுழல்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இரண்டாவதாக நடைப்பெறவுள்ள போட்டியில் பங்கு கொள்ளமாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது

எவ்வாறாயினும் இந்த வீரர்கள் சுழற்சி முறையில் விளையாட அனுதிக்கப்படுவர் எனதெரிவு குழுவின் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார் சுழற்சி முறைமையை மேற்கொள்வதன் மூலம் வீரர்களுக்கு உரிய ஓய்வினை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: