மீண்டும் அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித்..?

Monday, March 30th, 2020

பந்தை திட்டமிட்டு சேதப்படுத்திய குற்றத்துக்காக ஐ.சி.சியால் தண்டனை கொடுக்கப்பட்டு தடைக்காலம் நிறைவடைந்ததுள்ள நிலையில் மீண்டும் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பேற்கலாம் என அவுஸ்திரேலிய கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னாப்பிரிக்காவில் கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயற்பட்ட ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கு துணை தலைவர்; டேவிட் வோர்னர் மற்றும் பேங்கிராப்ட் ஆகியோரும் துணையாக இருந்ததாக கூறி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னருக்கும் கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பேங்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடைவிதிக்கப்பட்டது. அத்துடன் ஸ்டீவ் ஸ்மித அணியின் தலைவர் பதவியையும், டேவிட் வோர்னர் துணை தலைவர் பதவிகளையும் இழந்தனர்.

அதேநேரம் அணியின் தலைவர் பதவியேற்க ஸ்டிவ் ஸ்மித்துக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தடைக்காலம் முடிந்து இருவரும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் அணியின் தலைவராக பதவியேற்க ஸ்டிவ் ஸ்மித்துக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டுகள் தடை மார்ச் 29ஆம் திகதியோடு நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக மீண்டும் ஸ்டிவ் ஸ்மித் பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

Related posts: