மீண்டும் அணிக்கு திரும்பும் தினேஷ் சண்டிமல்!

Saturday, August 11th, 2018

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் இறங்க மறுத்ததால், நான்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட இலங்கை வீரர் தினேஷ் சண்டிமல், மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளார்.

கடந்த ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி வீரர் தினேஷ் சண்டிமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, பந்தை மாற்ற வேண்டும் என நடுவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டிமல் தனது அணியுடன் களம் இறங்க மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் சண்டிமலுக்கு மூன்று டெஸ்ட், நான்கு ஒருநாள் போட்டியில் விளையாட ஐ.சி.சி தடை விதித்தது.

இதன் காரணமாக, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இதுவரை சண்டிமலால் பங்கேற்க முடியவில்லை. தற்போது தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 4 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்து விட்டன.

மேலும், சண்டிமலுக்கு விதிக்கப்பட்ட தடையும் முடிவடைந்துவிட்டது. எனினும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சண்டிமலுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், அந்த அணியுடனான ஒரே ஒரு டி20 போட்டியில் தினேஷ் சண்டிமல் விளையாட உள்ளார்.

Related posts: