மீண்டும் மலிங்க!

Friday, January 5th, 2018

 

அண்மையில் இலங்கை கிரிக்கட் அணியில் இருந்து லசித் மலிங்க நீக்கப்பட்டுள்ளார். ஆனால் தொடர்ந்தும் அவர் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இலங்கையின் சார்பில் முரளிதரனுக்குப் பின்னர் பந்துவீச்சு துறையில் உலகின் கவனத்தை ஈர்த்தவர்களில் மலிங்க முக்கியமானவர்.

இதன் அடிப்படையில் மீண்டும் அவரது பங்களிப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் புதிய தலைமைப் பயிற்சியாளர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மீண்டும் அணியில் லசித் மலிங்க இணைத்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகின்றது.

Related posts: