மிஸ்பா கப்டனாகத் தொடரலம் – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை!

Thursday, February 16th, 2017

பாகிஸ்தான் அணியில் மிஸ்பா உல் – ஹக் தொடர்ந்து விளையாட விரும்பினால், கப்டனாகவே தொடரலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் கான் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,

“பாகிஸ்தான் டெஸ்ட் கப்டன் மிஸ்பா உல்-ஹக்கை டுபாயில் சந்தித்து நீண்ட நேரம் பேசினேன். அப்போது தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய 10முதல் 15 நாட்கள் வரை அவகாசம் கேட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணியின் கப்டனாக மிஸ்பா-உல்ஹக் இருந்து வருகிறார். அந்த பணியை அவர் நன்றாக செய்துள்ளார். அவர் தொடர்ந்து விளையாட விரும்பினால், கப்டனாகவே தொடரலாம். அவர் ஓய்வு பெற முடிவு செய்தால் 3 வடிவிலான கிரிக்கெட்டும் ஒரே கப்டனை நியமிப்பதில் முன்னுரிமை கொடுப்போம் என்றார்.

misbah-415x260

Related posts: