மில்லர் அதிரடி: சுருண்ட இலங்கை அணி!

Friday, February 3rd, 2017

 

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இலங்கை – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி டர்பனில் கிங்ஸ்மெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆம்லா(15), டிகாக்(17) ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர். மூன்றாவது வீரராக களமிறங்கிய டூபிளிசிஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அதிரடி மட்டையாளரான டிவில்லியர்ஸ்(3) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, டுமினி(11) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய மில்லர், டூபிளிசிஸ் வுடன் இணைந்து அதிரடி காட்ட தென் ஆப்பிரிக்கா அணியின் ஓட்டம் உச்சத்தை தொட்டது.

இதனால் இரு வீரர்களும் சதங்கள் விளாச, தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 307 ஓட்டங்கள் குவித்தது.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் டூபிளிசிஸ் 105 ஓட்டங்களும், மில்லர் 117 ஓட்டங்களும் குவித்தனர்.கடின இலக்கை விரட்டுவதற்கு களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர்கள் உட்பட அனைவரும் சீரான இடைவெளியில் பவுலியன் திரும்பிய வண்ணம் இருந்தனர். டிக்வல்லா(25), தரங்கா(26), மெண்டிஸ்(20), சண்டிமால்(36) என அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 37.5 ஓவர்களில் 186 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

hq720

Related posts: